Wednesday, November 14, 2012
Tuesday, November 13, 2012
தீபத் திருவிழாவாம் தீபாவளி!
தீபாவளி என்றாலே மனதில் வருவது பட்டாசு
ஆசையாய் கொளுத்தினாலும் கரியாய் போவதோ காசு
ஆசை தீர கொளுத்தினாலும் திருப்தியடையாது மனசு
திரும்பத் திரும்ப தேடுவார் பட்டாசு வகைகளில் புதுசு
தீபாவளி வந்தாலே எல்லா கடைகளிலும் அமோக விற்பனை
கடை கடையாய் ஏரியும் பூர்த்தியாகாத வீட்டாரின் நிபந்தனை
கட்டி கட்டி போட்டு போட்டு பார்த்தாலும் திருப்தியடையாததால் மன வேதனை
திரும்பவும் கடைக்குப் போய் மாற்றிவிட்டு வந்தால் சாதனை
தீபாவளி என்றாலே வீடுகள் தோறும் செய்யப்படும் பலகாரம்
வகை வகையாய் ருசி ருசியாய் சாப்பிட்டாலும் மாறாததோ மன பாரம்
வாரந்தோறும் விழாதோறும் கோயிலுக்குப் போய் செய்வார் பரிகாரம்
திரும்பத் திரும்ப செய்தும் மறைந்து போகாததோ பாவ தோஷம்
தீபாவளி வந்தால் சேர்ந்தே வந்திடும் புதுப் படம்
முன் பதிவு செய்தோ வரிசையில் நின்றோ பார்த்திட போராட்டம்
மூன்று மணி நேரம் பார்த்தும் நிரம்பாத மனதின் வெற்றிடம்
திரும்பத் திரும்ப பார்த்தாலும் வெறுமை வாட்டி வதைத்திடும்
தீபாவளி என்றால் தீபங்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும்
வீட்டை தீபம் அலங்கரித்தாலும் உள்ளமோ இருளடைந்திருக்கும்
விண்ணவரின் ஒளி உள்ளத்தில் உதித்து உருமாற்றாத மட்டும்
தீபாவளி தீபம் வெறும் வெளிப்படை வேஷமாய் இருந்துவிடும்
பட்டாசை அல்ல மனதில் உள்ள அசிங்கத்தை கொளுத்த வேண்டும்
புது ஆடைகள் அல்ல புதிய மனுஷனாய் மாற வேண்டும்
பலகாரங்கள் ருசியாய் செய்வதல்ல வாழ்க்கை ருசியாய் மாற வேண்டும்
புதுப் படம் பார்ப்பதல்ல புதிய நற்குணங்கள் வெளிப்பட வேண்டும்
தீராத சாபம் தீராத தோஷம் நீங்கிட மனந்திரும்பிடு
தீப ஒளியை ஏற்றிவைக்கும் கரங்களால் வேதாகமத்தை ஏந்திடு
தீய பழக்கங்கள் அகன்றிட எரிந்திட இயேசுவை ஏற்றிடு
தீய மனம் மாறிட உன் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திடு
Subscribe to:
Posts (Atom)