அழைத்த தேவனையும் உன் அழைப்பையும் மறந்து போனாயோ?
ஆழத்தில் கிடந்த உன்னை தூக்கி எடுத்தாரே நினைவில்லையோ?
இருளாய் இருந்த உன் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினாரே மறந்து போனாயோ?
ஈவாய் புது வாழ்வு கொடுத்தாரே தொழைத்து விட்டாயோ?
உன் பாவத்தை சுமந்து உனக்காய் மரித்தாரே மறந்து போனாயோ?
ஊதாரியாய் இருந்த உன்னை உலகத்திற்கு உப்பாய் மாற்றினாரே உணர்வில்லையோ?
எத்தனை நாட்கள் தான் இப்படி இரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பாய்?
ஏற்று கொண்ட தேவனை எத்தனை நாட்கள் தான் ஏமாற்றிக் கொண்டிருப்பாய்?
ஐயத்தோடும் வெட்கத்தோடும் வாழவா உன்னை மீட்டெடுத்தார்?
ஒப்புக்கொடுத்திடு ஒருவிசை உன் வாழ்வை கர்த்தர் சீர்படுத்திட
ஓர் வளமான வாழ்வாய் கனிதரும் மரமாய் மாற்றி ஸ்திரப்படுத்திடுவார்
ஔஷதமாம் தேவ வார்த்தை உன் வாயை உன் மனதை உன் வாழ்வை நிறைத்து நடத்திட தீர்மானித்திடு
Technorati Tags: Tamil Christian Poem,Youth Prayer,Youth Poem,Christian Poem,Sin,Backslider,Repentance,Holiness,Revival
No comments:
Post a Comment