பானையில் உள்ள பொங்கல் பொங்கி வழிவது போல
என் உள்ளம் சந்தோஷத்தால் பொங்கி வழிகின்றது
பொங்கல் பொங்குவதற்கு காரணம் சூடு
உள்ளம் பொங்குவதற்கு காரணம் இயேசு
பொங்கல் பொங்குவது உஷ்ணத்தால்
உள்ளம் பொங்குவது சந்தோஷத்தால்
பானையிலிருந்து பொங்கி வழிவது அரிசி
உள்ளத்திலிருந்து பொங்கி வழிவது மகிழ்ச்சி
பொங்கலை ருசித்தால் இனிப்பு
இயேசுவை ருசித்தால் இரட்சிப்பு
பொங்கலோடு சாப்பிடுவோம் கரும்பு
உள்ளதோடு இயேசு வந்தால் போய்விடும் குறும்பு
பொங்கல் பொங்கும் பண்டிகை தோறும்
உள்ளமோ பொங்கும் தினந்தோறும்
பொங்கலை பொங்க தேவை பாத்திரம் - உன்
உள்ளம் பொங்க தேவை இயேசு மாத்திரம்
பொங்கல் கொண்டாடுவர் தை மாதத்தில்
உலகம் மூழ்கி கிடக்கிறது பாவத்தில்
பொங்கலின் முதல் நாள் போகி
நாம் எல்லோரும் ஒரு பாவி
பொங்கலன்று வீட்டிற்கு முன் போடுவார் கோலம்
நித்திய சந்தோஷத்தையும் நித்திய வாழ்வையும் இழப்பதற்கு காரணம் பாவம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி
பழைய சுபாவம் மாறுவதற்கு இயேசுவே வழி
அறியாதோர் பொங்கலை படைப்பர் சூரியனுக்கு
அறிந்து ஒப்புக்கொடு உன்னை - உன்னையும் சூரியனையும் படைத்த ஆண்டவனுக்கு
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பர்
பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டால் நித்திய வாழ்வை பெறுவர்
பொங்கல் தமிழரால் கொண்டாடப்படும் பண்டிகை
இயேசுவே உலகத்தின் அனைவருக்கும் தரக்கூடும் நம்பிக்கை
பொங்கலின் கடைசி நாளாக கொண்டாடுவர் காணும் பொங்கலை
உலகத்தின் கடைசி நாளில் அனைவரும் காண்பர் இயேசுவின் இரண்டாம் வருகையை
- மரியோஷ்
poem is thought provoking,nicely phrases with meaning.
ReplyDeletepoem is great and touching....!
ReplyDeletesuper poem anna
ReplyDelete