தேவனுக்குக் காத்திருப்பதை விட்டு விட்டு
தேவையில்லாத போனுக்காகவும் எஸ்.எம்.எஸ்.-காகவும் காத்திருக்கிறாயோ?
தேடி வந்து மீட்டவரை மறந்து விட்டு
தேடிப் போய் பாவத்தினால் வீணாய் போவதை நாடுகிறாயோ?
தேவையுள்ள தேசம் உன் முன் திறந்து கிடக்கையில்
தேங்கி போன நிலையில் உன் அறைக்குள் பூட்டிக் கிடக்கிறாயோ?
தேற்றறவாளனை தேவன் உனக்கு உனக்குள் தந்திருக்க
தேற்றிடுவார் உண்டோ என்று ஏங்கி நிற்கிறாயோ?
தேசமே பாவத்தினால் பாழாய் போய்க் கொண்டிருக்கையில்
தேகத்தின் சுகத்தை இன்பத்தை நாடிக் கொண்டிருக்கிறாயோ?
தேவனுக்காய் காத்திருந்து புது பெலன் பெற்றிடு
தேவையற்ற உறவுகளை தேவப் பெலத்தால் விட்டிடு
தேடி வந்தவரை தள்ளி விடாதே - நீ
தேடிப் போன பாவத்தினின்று உன்னை மீட்டெடுத்தவரை மறந்திடாதே
தேவையுள்ள தேசத்தில் உனக்கு திறந்த வாசல் உண்டு
தேங்கி போன உன் ஆவிக்குரிய வாழ்வில் எழுச்சி உண்டு
தேற்றறவாளனின் உதவியை எப்பொழுதும் நாடிடு - உன்னை
தேற்றி தேசத்துக்காய் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு
தேசத்தின் பாவத்தை தேவனின் பாரத்தை சிலுவையின் வெற்றியை சிந்திய இரத்தத்தினை பார்த்திடு
தேகத்தை பரிசுத்தத்திற்காகவும் பரமனின் சேவைக்காகவும் ஒப்புக்கொடுத்திடு
No comments:
Post a Comment