Pages

Wednesday, March 13, 2013

வாலிபனின் ஜெபம்–5 (Youth Prayer)

Praying Youth

மென்மையானவரே உம் மெல்லிய சத்தத்திற்கு செவிக் கொடுக்கவில்லையே

பரிசுத்தமானவரே உம் பரிசுத்த அழைப்பில் பங்கு கொள்ளவில்லையே

 

மகிமையின் தேவனே என் இருதயத்தை மாசுப் படுத்தி விட்டேனே

பரிசுத்த ஆவியே உம்மை நான் துக்கப்படுத்தி விட்டேனே

 

மன்னவனே என் மனதை தீய பாவ ஆளுகைக்கு உட்படுத்தினேனே

பலியானவரே என் பாவச் செயலால் உம் பலியை வீணாக்கினேனே

 

மரித்துயிர்த்தெழுந்தவரே என் மனதை சாவானவைகளில் செலுத்திவிட்டேனே

பாதாளாமிரங்கினவரே என் மனதை கீழானவைகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேனே 

 

மக்களுக்காய் கண்ணீர் சிந்த வேண்டிய நான் எனக்காய் அழுகிறேனே

பரிசுத்தத்திற்காக அழைக்க வேண்டிய நான் பரிசுத்தம் கெஞ்சுகிறேனே

 

 

மாசில்லாதவரே என் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுகிறேன்

பின்மாறிப் போய்விட்டேன் பின்மாரிக்காய் வேண்டுகிறேன்

 

 

மோசமாக்கப்பட்ட பூமியின் மீது அசைவாடின ஆவியானவரே

பாவ மோசத்தால் கெட்டுப்போன என் இருதயத்தின் ஆழத்தை ஆட்கொண்டுவிடும்

 

மனுக்குலமும் ஜீவன்களும் வாழ மீண்டும் இப் பூமியை மாற்றினவரே

பாழாய்ப் போன என் இருதயத்தை மறுரூபப்படுத்திவிடும்

 

முற்றிலும் இருளாயிருந்த பூமியில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவரே

பலவித சோதனைகளால் இருளாய் போன என் வாழ்வில் வெளிச்சத்தை கட்டளையிட்டுவிடும்

 

மாற்றப்பட்டு ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் காணப்பட்ட பூமியை சீர்ப்படுத்தினவரே

பரிசுத்த வாழ்வில் நிலைத்திட கனித் தந்திட நீர் நல்லது என கண்டிட சீர்ப்படுத்திவிடும்

 


No comments:

Post a Comment