தெரிந்தெடுக்கிறதே
நீர் என்னை பெரிய காரியங்களுக்காய் தெரிந்து கொண்டீர்
ஆனால் நிர்பந்தமான என் மனமோ அர்ப்பமானவைகளை தெரிந்தெடுக்கிறதே
பரிசுத்தமான வாழ்வு வாழ என்னைத் தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவச் சிற்றின்பங்களை என் மனம் தெரிந்தெடுக்கிறதே
பரலோக சிந்தைக் கொண்டிருக்க தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவச் சிந்தையை என் மனம் தெரிந்தெடுக்கிறதே
உம்மோடு சம்பாஷனை செய்ய என்னைத் தெரிந்து கொண்டீர்
அனால் உள்ளமோ சபலத்தை தெரிந்தெடுக்கிறதே
உமது பிரியத்தால் என்னைத் திருப்திப்படுத்த தெரிந்து கொண்டீர்
ஆனால் உலகத்தின் பிரியத்தை என் உள்ளம் திரும்பத் திரும்ப தெரிந்தெடுக்கிறதே
உமது உறவில் மகிழ்ந்திருக்க என்னைத் தெரிந்து கொண்டீர்
ஆனால் உலகத்தின் உறவில் இச்சைகளில் மகிழ்ந்திருப்பதை என் உள்ளம் தெரிந்தெடுக்கிறதே
ஒதுக்கப்பட்டு வெறுக்கப்பட்ட என்னைத் உமக்காக தெரிந்து கொண்டீர்
ஆனால் ஒவ்வொருவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதையே என் உள்ளம் தெரிந்தெடுக்கிறதே
பாதாளத்தை நோக்கி விரைவாய் செல்பவரை தேட மீட்க தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவத்தை நோக்கி விரைவாய் செல்வதை தேகம் மனம் தெரிந்தெடுக்கிறதே
உலகத்திற்கு உப்பாக ஒளியாக இருந்து சுவை தர வெளிச்சம் வீச தெரிந்து கொண்டீர்
ஆனால் உப்பு சாரமற்றுப் போய் ஒளி இருளாகி போனதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே
பரிசுத்தத்தை காத்துக்கொண்டு பூலோக பிரஜைகளை பரலோக பிரஜைகளாய் மாற்ற தெரிந்து கொண்டீர்
ஆனால் பரிசுத்தத்தை கைவிட்டு பாவ பழக்கத்தில் பிரவேசித்ததால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே
சிந்தையில் சிலுவைப் பாடுகளை சிந்தித்து சிறுமைப்பட்டவர்களை சீஷர்களாக்க தெரிந்து கொண்டீர்
ஆனால் சிந்திய இரத்தமும் சிலுவையின் கொடுமையும் மறந்து போனதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே
ஆத்துமப் பாரம் கொண்டு மனம் போல் வாழ்பவர்களை மகிமையின் மன்னவனிடத்தில் சேர்க்க தெரிந்து கொண்டீர்
ஆனால் ஆத்துமப் பாரம் மறைந்து ஆடம்பரம் பெருகி ஆனவம் ஆட்கொண்டதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே
தெரிந்து கொள்ளுதலை திரும்பிப் பார்க்க செய்து உம்மிடம் திரும்பிட செய்திடும்
சீர்கெட்ட வாழ்வை சீர்தூக்கி பார்த்து சிலுவையண்டை சேர்ந்திட செய்திடும்
இழந்தப் பாரத்தை பெற்றிட இழிவானவைகளை விட்டிட செய்திடும்
இனித் தூரம் போகாமல் உம்மிடம் திரும்பிட உம்மோடு என்றும் இருந்திட செய்திடும்
மண்ணுலக மாயைகளை மாசாக என்னி மறந்திட செய்திடும்
மன்னவனையே தேடி மன்னாவாம் வேதத்தையே தியானித்திட செய்திடும்
பலவிதப் பாவப் சோதனைகளை பரமனின் ஆவியின் பெலத்தால் வென்றிட செய்திடும்
பரலோக பாவனை கொண்டிட நித்தியத்தை சிந்தித்து நிதானித்து நடந்திட செய்திடும்
Technorati Tags: Tamil Christian Poem,Christian Poem,Youth Poem,Tamil Poem,Choices,Choice,What to choose
No comments:
Post a Comment