Pages

Tuesday, October 23, 2012

வாலிபனின் ஜெபம்–3 (மாற்றும் தேவன்)

மாற்றும் தேவன்

Prayer

தோல்வியுற்றவனை துவண்டுவிடாதபடி தூக்கி நிறுத்துபவரே

பாவத்தில் விழுந்தவனை பரிசுத்தத்துக்கு அழைப்பவரே
 
பாவத்தை பார்க்ககூடாத சுத்த கண்னராகிய நீர்
பாவத்தில் வாழ்பவரை சுத்தம் செய்ய வந்தீர்
 
எவரும் தூக்கக்கூடாத இருள் நிறைந்த பாவ படுகுழியில் கிடப்பவனை
யாரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர் தூக்கி விட்டீரே
 
மனம் தளர்ந்து இருள் நிறைந்து தன்னம்பிக்கை இழந்தவன் வாழ்வில்
மணம் சேர்த்து ஒளி நிறைத்து நம்பிக்கை கொடுத்து விட்டீரே
 
தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து வாழ்ந்தவனை
தன் அன்பால் நிறைத்து அனைவருக்கும் ஆசிர்வாதமாய் மாற்றி விட்டீரே


Read other Youth Poems

Youth Prayer 1 (Tamil)                   Youth Prayer 2 (Tamil)


Thursday, October 18, 2012

வாலிபனின் ஜெபம் - 2

Youth Praying

அனாவசியமானவற்றை அகற்றிட ஆவி தாரும்

பெலவீன பகுதிகளில் பெலப்பட உம் பெலன் தாரும்
 
அங்கங்களையும் அந்தரங்கங்களையும் ஆவியால் நிரப்பும்
தவறின பகுதிகளில் திடன் கொள்ள தீவிர படுத்தும்
 
உதறி தள்ளினவைகளை (மீண்டும்)  உரிமை பாராட்டாமல் இருக்க உதவி செய்யும்
விட்டுவிட்டவைகளை வீண் என எண்ண எழுச்சி தாரும்
 
மன்னுக்குரியவைகளை மறந்திட உம் மகிமையால் நிரப்பும்
வின்னுக்குரியவைகளை விடாதிருக்க விசுவாசத்தால் நிரப்பும்
 
மாமிச சிந்தை எழாதபடி மறுரூபப் படுத்திவிடும்
ஆவியின் சிந்தை மேலோங்கிட முற்றிலும் ஆட்கொண்டுவிடும்
 
பரிசுத்தத்தை காத்திட பரமனே பாதுகாத்திடும்
பரவசத்தை அல்ல பரிசுத்தத்தை நாடிட செய்திடும்
 
நித்தியத்தை தேடிட நித்தம் நின் சிந்தையால் நிறைத்திடும்
பரலோகம் சேர்ந்திட வாலிபர்களை சேர்த்திட செய்திடும்

Click to also read வாலிபனின் ஜெபம் –1 - Youth Prayer 1 (Tamil)